செய்தி

நடிகை பூஜா ஹெக்டேவுக்கு கொலை மிரட்டல்..!

நடிகை பூஜா ஹெக்டேவுக்கு கொலை மிரட்டல் வந்திருப்பதாக வெளியாகியுள்ள தகவல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தெலுங்கில் முன்னணி நாயகியாக வலம் வருபவர் நடிகை பூஜா ஹெக்டே. தமிழில் கடைசியாக விஜயுடன் ‘பீஸ்ட்’ படத்தில் நடித்தார். ஆனால், அது தோல்வியை சந்தித்தது. இந்த நிலையில், சினிமாவில் இருந்து தற்காலிகமாக குட்டி பிரேக் எடுத்துள்ளார் பூஜா ஹெக்டே. இந்த நிலையில்தான், அவருக்கு கொலை மிரட்டல் வந்துள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது.

நடிகை பூஜா ஹெக்டே சமீபத்தில் துபாயில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சிக்கு மும்பையில் இருந்து கிளம்பிச் சென்றுள்ளார். அந்த நிகழ்ச்சியில் ஒரு சிறு பிரச்சினை காரணமாக அவர் காரசார வாக்குவாதத்தில் ஈடுபட்டு நிகழ்ச்சியில் இருந்து பாதியிலேயே திரும்பிவிட்டதாக தகவல்கள் வெளியாகின.

Did Pooja Hegde Receive Death Threats In Dubai Club After Heated Argument?  Actress' Team Reacts | Hindi News, Times Now

இந்த விவாதம் காரணமாகதான் நடிகை பூஜா ஹெக்டேவுக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டதாக பாலிவுட்டின் பிரபல புகைப்படக் கலைஞர் வைரல் பஹாயானி தனது சமூகவலைதளப் பக்கத்தில் தெரிவிக்க இந்த செய்தி இணைய வெளியில் அவரது ரசிகர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியது. ஆனால், இது முற்றிலும் பொய்யான செய்தி என்றும் இதில் ஒரு சதவீதம் கூட உண்மை இல்லை என்றும் நடிகை பூஜா ஹெக்டே தரப்பு தெரிவித்துள்ளது. ஆனால், இந்த விவகாரம் தொடர்பாக நடிகை பூஜா ஹெக்டே இதுவரை எதுவும் விளக்கம் கொடுக்காமல் அமைதி காத்து வருகிறார்.

(Visited 10 times, 1 visits today)

Mithu

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!