இலங்கை செய்தி

கொலை சம்பவம் தொடர்பில் நால்வருக்கு மரண தண்டனை

கூரிய ஆயுதங்களால் தாக்கி நபர் ஒருவரை கொன்ற சம்பவம் தொடர்பில் நால்வருக்கு இன்று (11) மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

1996 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 02 ஆம் திகதி மதீனகந்த பிரதேசத்தில் களுத்துறை கலமுல்ல, ரிதி மாவத்தையில் வசிக்கும் நபர் ஒருவரை கூரிய மற்றும் மொட்டையான ஆயுதங்களால் தாக்கி கொலைசெய்து அவரது இளைய சகோதரனை தாக்கி படுகாயப்படுத்தியமை தொடர்பில் ஏழு சந்தேகநபர்கள் மீது குற்றஞ்சாட்டப்பட்டிருந்தது.

அதன்படி, வழக்கில் 1, 2, 3 மற்றும் 5வது பிரதிவாதிகளுக்கு மரண தண்டனை விதித்தும், 6 மற்றும் 7வது பிரதிவாதிகளை விடுதலை செய்தும் உயர் நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டார்.

எவ்வாறாயினும், இந்த சம்பவத்துடன் தொடர்புடைய 4வது பிரதிவாதி தற்போது உயிரிழந்துள்ளதாக உயர்நீதிமன்றத்தில் உண்மைகள் வெளியாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

(Visited 13 times, 1 visits today)

Jeevan

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை