இலங்கை

இலங்கை: கோப் குழுவிலிருந்து தயாசிறி ஜயசேகர இராஜினாமா

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் (SLFP) பாராளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர, பொது நிறுவனங்கள் தொடர்பான பாராளுமன்றக் குழுவில் (COPE) இருந்து இராஜினாமா செய்துள்ளதாக அறிவித்துள்ளார்.

அவர் தனது ராஜினாமா கடிதத்தை சபாநாயகருக்கு அனுப்பியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பல குற்றச்சாட்டுகள் எழுந்துள்ள தலைவருடன் இணைந்து பணியாற்ற முடியாது என்று அவர் தனது
‘எக்ஸ்’ தளத்தில் குறிப்பிட்டுள்ளார்.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன (SLPP) அரகலயவிடம் இருந்து பாடம் கற்றுக் கொள்ளவும், மக்களை மதிக்கவும் தவறியிருப்பது துரதிஷ்டவசமானது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

ஊழலை தவிர்க்குமாறு அரச அதிகாரிகளுக்கு அறிவுறுத்துவதற்கு பாராளுமன்றத்தில் உள்ள குழுக்களும் ஊழலற்றதாக இருக்க வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் ஜயசேகர மேலும் தெரிவித்தார்.

இதே காரணத்தை காட்டி நேற்று கோப் குழுவில் இருந்து விலகிய சமகி ஜன பலவேகய (SJB) பாராளுமன்ற உறுப்பினர் எரான் விக்கிரமரத்னவின் ராஜினாமாவை தொடர்ந்து அவரது ராஜினாமா இடம்பெற்றுள்ளது.

(Visited 17 times, 1 visits today)

TJenitha

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்
error: Content is protected !!