கரிபிய நாடுகளுக்கு ஆபத்தான சூறாவளி குறித்து எச்சரிக்கை
கரிபிய நாடுகளுக்கு கடுமையான சூறாவளிக்கான முன்னெச்சரிக்கை விடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
பேரல் (Beryl) சூறாவளி நான்காவது நிலையாக வகைப்படுத்தப்பட்டுள்ளதாகவும் ஆக அதிக ஆபத்தானதாக சூறாவளி உருவெடுத்திருப்பதாகவும் குறிப்பிடப்படுகின்றது.
மணிக்கு 200 கிலோமிட்டருக்கும் அதிகமான வேகத்தில் அது வீசுகிறது. சூறாவளி வின்வார்ட் (Windward) தீவுகளை நெருங்குகிறது.
அதனால் திடீர் வெள்ளம் ஏற்படக்கூடும் என்று எச்சரிக்கப்பட்டது. அந்த வட்டாரத்தின் பல நாடுகளில் சூறாவளி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
15 செண்டிமீட்டர்வரை மழை பெய்யக்கூடும். கடல் அளவு வழக்கத்தைவிட மூன்று மீட்டர் உயரக்கூடும் என்று அமெரிக்க தேசிய சூறாவளி நிலையம் முன்னுரைத்துள்ளது.
சூறாவளி பேரல் வீசும் இடங்களில் மின்சாரம் தடைப்படலாம். வீடுகள் சேதமடையலாம் என்று அஞ்சப்படுகிறது.
மக்கள் பாதுகாப்பான இடங்களை நாடிச் செல்லும்படி அரசாங்கங்கள் கேட்டுக்கொள்கின்றன.