ஜேர்மனியில் ATMகளை உடைத்து கொள்ளையில் ஈடுபடும் மர்ம நபர்களால் ஆபத்து!
ஏடிஎம் பண இயந்திரங்களை தகர்த்து ஏடிஎம்களில் இருந்து மில்லியன் கணக்கில் கொள்ளையர்கள் கொள்ளையடித்து வருவதால் ஜெர்மனி முழுவதும் வன்முறை தொடர்கிறது.
2023 ஆண்டு ஜேர்மன் நகரமான க்ரோன்பெர்க்கில் இவ்வாறான கொள்ளை சம்பவம் பதிவாகியதை தொடர்ந்து கடந்த சில மாதங்களாக இவ்வாறான வன்முறை சம்பவங்கள் தொடர்ச்சியாக பதிவாகி வருகிறது.
பாரம்பரிய வகையான வங்கிக் கொள்ளைகளுக்கு மாற்றாக, ஐரோப்பா முழுவதும் உள்ள கிரிமினல் குழுக்கள் இப்போது தங்கள் கவனத்தை ஏடிஎம்கள் மீது குவித்துள்ளனர்.
இந்த கொள்ளை சம்பவம் பிற ஐரோப்பிய நாடுகளை விட ஜெர்மனியில் அதிகளவில் இடம்பெறுகிறது. இதற்கான முக்கிய காரணம் வங்கிகளில் பணத்தை வைப்பிலிடுவது இன்னும் நடைமுறையில் இருப்பதால் ஆகும்.
ஐரோப்பிய நாடுகள் கோவிட்-19 தொற்றுநோயைத் தொடர்ந்து ரொக்கப் பணம் செலுத்துவதில் இருந்து விலகிச் செல்ல முனைகின்றன, ஜெர்மனி அவ்வாறு செய்யவில்லை. 2023 ஆம் ஆண்டில், அனைத்து பரிவர்த்தனைகளிலும் பாதி இன்னும் பணமாகவே செய்யப்படுகின்றன.
குறைவான ஏடிஎம்களைக் கொண்ட நெதர்லாந்துடன் ஒப்பிடுகையில், 2023 ஆம் ஆண்டில் மட்டும் 461 கொள்ளைச் சம்பவங்களை ஜெர்மனி கண்டுள்ளது.
இவற்றை கட்டுப்படுத்த ஜெர்மன் வங்கிகள் பல மில்லியன் யூரோக்களை முதலீடு செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.