2026 ஆம் ஆண்டில் காத்திருக்கும் ஆபத்து: மொட்டு கட்சி எச்சரிக்கை!
கொழும்பு மாநகரசபை ஊடாக தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்துக்கு, மிக முக்கிய செய்தியொன்று வழங்கப்பட்டுள்ளது என்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி தெரிவித்துள்ளது.
தேசிய மக்கள் சக்தியின் ஆளுகையின்கீழுள்ள கொழும்பு மாநகரசபையின் பாதீடு நேற்று (22) தோற்கடிக்கப்பட்டது.
இந்நிலையில் கொழும்பில் இன்று (23) நடைபெற்ற ஊடக சந்திப்பின்போது இது தொடர்பில் கருத்து வெளியிட்ட முன்னாள் இராஜாங்க அமைச்சர் இந்திக்க அனுருத்த கூறியவை வருமாறு,
“ இலங்கையிலுள்ள உள்ளாட்சிசபைகளில் கொழும்பு மாநகரசபைதான் பிரதானமானது. அதில் ஏற்பட்டுள்ள பின்னடைவை அரசாங்கம் சாதாரண விடயமாகக் கருதிவிடக்கூடாது.
இதன்மூலம் வழங்கப்பட்டுள்ள செய்தியை உணர்ந்து, ஜனநாயக வழியில் பயணிப்பதற்கு முன்வரவேண்டும்.
அவ்வாறு இல்லாமல் ஏதேச்சதிகாரமாக செயல்பட முற்பட்டால் 2026 ஆம் ஆண்டு அரசாங்கத்துக்கு அபாயமிக்கதாகவே அமையும்.
தேசிய மக்கள் சக்தியின் உள்ளாட்சிசபைகளின் தலைவர்கள், மக்கள் தொடர்பில் தீர்மானங்களை எடுக்கவில்லை. மக்களுக்காக களத்தில் இறங்கி செயல்படவில்லை. அதன் பிரதிபலன் கொழும்பில் கிடைத்துள்ளது.
மக்களின் நிலைப்பாட்டை உணர்ந்து, அதற்கேற்ப வாக்களித்த அனைத்து உறுப்பினர்களுக்கும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி நன்றி தெரிவிக்கின்றது. ” – என்றார் இந்திக்க அனுருந்த.





