இலங்கை – சூறாவளியாக உருமாறும் காற்றழுத்த தாழ்வு நிலை : அடுத்த 06 மணித்தியாலங்களில் ஏற்படவுள்ள மாற்றம்!
தென்மேற்கு வங்கக்கடலில் இன்று (27) காலை ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகியுள்ளது. டபிள்யூ. வளிமண்டலவியல் திணைக்களத்தின் தகவலின்படி, இது திருகோணமலையில் இருந்து கிழக்கே சுமார் 110 கிலோமீற்றர் தொலைவில் முற்பகல் 11.30 மணியளவில் நிலை கொண்டிருந்தது.
ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நாட்டின் கிழக்கு கரையை அண்மித்து நகர்ந்து அடுத்த 06 மணித்தியாலங்களில் சூறாவளியாக வலுவடையும் என திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த அமைப்பின் தாக்கம் காரணமாக, இலங்கையின் பல பகுதிகளில் வானம் மேக மூட்டத்துடன் காணப்படுவதுடன், வடக்கு, வடமத்திய, கிழக்கு மற்றும் வடமேற்கு மாகாணங்களில் மிக அதிக மழை மற்றும் பலத்த காற்று வீசக்கூடும் என அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டின் வடக்கு, வடமத்திய, மத்திய, மேற்கு மற்றும் வடமேற்கு மாகாணங்களிலும் திருகோணமலை மற்றும் கேகாலை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும்.
சில இடங்களில் 150 மில்லிமீற்றருக்கும் அதிகமான கனமழை பெய்யக்கூடும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இடியுடன் கூடிய மழை தற்காலிக பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய ஆபத்துக்களை குறைக்க தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு மக்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.