பிரான்ஸின் தேசிய அஞ்சல் சேவையை குறிவைத்து சைபர் தாக்குதல்!
பிரான்ஸின் தேசிய அஞ்சல் சேவை மற்றும் அதன் வங்கிப் பிரிவை குறிவைத்து இன்று சைபர் தாக்குதல் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதன்காரணமாக பார்சல் டெலிவரிகள் மற்றும் ஆன்லைன் கட்டணங்கள் தாமதப்படுத்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
லா போஸ்ட் (La Poste) எனப்படும் அஞ்சல் சேவை, சேவைகளை வழங்க முடியாத நிலை ஏற்பட்டதாக அறிக்கையொன்றில் தெரிவித்துள்ளது.
இந்த சம்பவம் வாடிக்கையாளர் தரவுகளில் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை, ஆனால் பார்சல் மற்றும் அஞ்சல் விநியோகத்தை சீர்குலைத்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் கிறிஸ்துமஸ் பரிசுகள் உட்பட பார்சல்களை அனுப்ப அல்லது மீட்டெடுக்க வரிசையில் நின்ற பலர் விரக்தியுடன் திரும்பியதாக தெரிவிக்கப்படுகிறது.
சேவைகளை விரைவாக மீட்டெடுக்க பணியாற்றி வருவதாக அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.





