பிரித்தானிய இணையத்தளம் மீது சைபர் தாக்குதல்? இரட்டை குடியுரிமை, மணமுடிக்க இருப்போருக்கு சிக்கல்
பிரித்தானியாவில் ACRO எனப்படும் குற்றப் பதிவு அலுவலகத்தின் இணையத்தளம் மீது சைபர் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதனால் பலரால் இணையதளம் மூலமாக சேவைகளை பெற்றுக் கொள்ள முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.
பொதுவாக இலங்கை போன்ற நாடுகளில் இருந்து பிரித்தானயாவுக்கு புலம்பெயர்ந்தவர்களுக்கு இந்த சேவை மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாகும்.
இரட்டை குடியுரிமை பெறுவதற்கும் இலங்கையில் திருமணம் செய்துக் கொள்ளசெல்ல வேண்டும் என்றால் இந்த இணையத்தில் விண்ணப்பித்து சான்றிதழை பெற வேண்டியது கட்டாயமாகும்.
எனினும் தற்போது விண்ணப்பித்தவர்கள் அதனை பெற நீண்ட தாமதம் ஏற்படுவதற்கு வாய்ப்புகள் உள்ளதெனவும் இதனால் சில தடைகளை சந்திக்க நேரிடும் என இலங்கை செல்ல காத்திருப்பவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
அந்த இணையத்தளத்திற்கு சென்றால் “தொழில்நுட்பச் சிக்கல் விசாரிக்கப்படும் நிலையில் எங்கள் இணையதளம் offline உள்ள நிலையில் இது இணையப் பாதுகாப்பு சம்பவத்துடன் தொடர்புடையது என இப்போது எங்களுக்குத் தெரியவந்துள்ளது. உங்கள் பொறுமைக்கு நன்றி” என பதிவு ஒன்று காணப்படுகின்றது.
மேலும், ACRO தயாரிப்பு அல்லது சேவைக்கு விண்ணப்பிக்க, கீழே உள்ள தொடர்புடைய முகவரிகளுக்கு மின்னஞ்சல் அனுப்புமாறு பொது மக்களிடம் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
அதற்கமைய, பொலிஸ் சான்றிதழ் பெறுவதற்கு – policecertificateapp@acro.police.uk
சர்வதேச குழந்தைகள் பாதுகாப்பு சான்றிதழ் பெறுவதற்கு icpcapplication@acro.police.uk
பொலிஸ் தேசிய கணினி பொருள் அணுகல் கோரிக்கைக்கு subjectaccessrequest@acro.police.uk
தேசிய குற்றப் பதிவு நீக்குதல் செயல்முறை deletions@acro.police.uk
விண்ணப்பங்களை முறையாகச் செயல்படுத்தும்போது தவிர்க்க முடியாத தாமதங்கள் ஏற்படுவதற்கு வருந்துகிறோம். நீங்கள் எங்களுக்கு ஒரு பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தை அனுப்பியிருந்தால் அல்லது ஏற்கனவே ஒரு மின்னஞ்சல் செய்திருந்தால், எங்களை மீண்டும் தொடர்பு கொள்ள வேண்டிய அவசியமில்லை.
உங்களிடம் புதிய தேவைகள் இருந்தால் மற்றும் முதல் முறையாக தொடர்பு கொண்டால், customer.services@acro.police.ukக்கு மின்னஞ்சல் அனுப்பவும்.
பொதுவான தரவு பாதுகாப்பு விசாரணைகளுக்கு, dataprotectionofficer@acro.police.uk ஐ தொடர்பு கொள்ளவும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.