CWC – ஆஸ்திரேலியாவுக்கு 213 ஓட்டங்கள் இலக்கு
இந்தியாவில் நடைபெற்றுவரும் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் இன்று 2-வது அரையிறுதி போட்டியில் புள்ளிப்பட்டியலில் 2 மற்றும் 3-ம் இடங்களை பிடித்த தென் ஆப்பிரிக்கா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் மோதுகின்றன.
இதில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்க அணி பேட்டிங் தேர்வு செய்தது.
அதன்படி தென் ஆப்பிரிக்க அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக டிகாக் மற்றும் பவுமா ஆகியோர் களமிறங்கினர். பவுமா 0, டிகாக் 3, மார்க்ரம் 10, ராஸ்ஸி வான் டெர் டுசென் 6 ரன்கள் எடுத்து வெளியேறினர்.
இதனால் 11.5 ஓவர்களில் 24 ரன்கள் எடுத்து 4 விக்கெட்டுகளை இழந்து தென் ஆப்பிரிக்கா திணறியது.
இதனையடுத்து கிளாசன் – மில்லர் ஜோசி நிதானமாக விளையாடி ரன்களை சேர்த்தனர். இந்த ஜோடியை ஹெட் பிரித்தார்.
கிளாசன் 47 ரன்னில் இருந்த போது ஹேட் பந்து வீச்சில் போல்ட் ஆனார். அடுத்த வந்த மார்கோ யான்சன் முதல் பந்திலேயே ஆட்டமிழந்தார்.
ஒரு பக்கம் விக்கெட் போனாலும் மறுமுனையில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த மில்லர் அரைசதம் விளாசி அசத்தினார். கடைசி வரை போராடிய அவர் சதம் அடித்து 101 ரன்னில் அவுட் ஆனார்.
இறுதியில் தென் ஆப்பிரிக்கா அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 212 ரன்கள் சேர்த்தது.
ஆஸ்திரேலிய அணி தரப்பில் ஸ்டார்க், கம்மின்ஸ் 3 விக்கெட்டும், ஹசில்வுட், ஹெட் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.