சாம்பியன்ஸ் டிரோபியை குறி வைக்கும் கம்மின்ஸ்!
2025 சாம்பியன்ஸ் டிரோபியானது பிப்ரவரி 19ம் திகதி முதல் தொடங்கி மார்ச் 9 வரை நடைபெறவிருக்கிறது. பாகிஸ்தான், இந்தியா, நியூசிலாந்து, வங்கதேசம், தென் ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா, ஆப்கானிஸ்தான், இங்கிலாந்து முதலிய 8 அணிகள் இரண்டு பிரிவுகளாக பிரிக்கப்பட்டு லீக் போட்டிகள் நடத்தப்படவிருக்கின்றன. போட்டிகள் பாகிஸ்தான் மற்றும் துபாயில் நடத்தப்படவிருக்கின்றன.
இந்தியா, பாகிஸ்தான் பிரச்னையால் இந்தியா பங்கேற்கும் போட்டிகள் மட்டும் ஹைப்ரிட் முறைப்படி நடத்தப்படவிருக்கிறது. மார்ச் 9-ம் தேதி நடத்தப்படும் இறுதிப்போட்டிக்கு இரண்டு மைதானங்கள் திட்டமிடப்பட்டுள்ளன. ஒருவேளை இந்தியா இறுதிப்போட்டிக்கு முன்னேறும் பட்சத்தில் போட்டியானது துபாயில் நடத்தப்படும், அப்படி இல்லை என்றால் பாகிஸ்தானில் லாகூர் மைதானத்தில் நடத்தப்படும்.
சாம்பியன்ஸ் டிரோபி தொடரின் முதல் ஆட்டம் பிப்ரவரி 19 அன்று பாகிஸ்தான்-நியூசிலாந்து அணிகளுக்கு இடையே தொடங்குகிறது. இந்த சூழலில் அனைத்து அணிகளும் அவர்களுடைய அணியையும், உத்தேச அணியையும் அறிவித்து வருகிறது.
2025 சாம்பியன்ஸ் டிரோபிக்கான உத்தேச அணியை ஆஸ்திரேலியா அறிவித்துள்ளது. பாட் கம்மின்ஸ் தலைமையில் அறிவிக்கப்பட்டிருக்கும் அணியில், ஓய்வு பெற்ற டேவிட் வார்னர், காம்ரான் க்ரீன் மற்றும் அப்பாட் என 2023 ஒருநாள் உலகக்கோப்பை அணியிலிருந்து மூன்று வீரர்களுக்கான மாற்று பெயர்கள் மட்டுமே இடம்பெற்றுள்ளன.
அணியில் புதியதாக மேட் ஷார்ட், ஆரோன் ஹார்டி மற்றும் நாதன் எல்லீஸ் முதலிய வீரர்கள் இடம்பெற்றுள்ளனர். மற்றபடி டிராவிஸ் ஹெட், க்ளென் மேக்ஸ்வெல், ஸ்டீவ் ஸ்மித், லபுசனே, மிட்செல் ஸ்டார்க், ஹசல்வுட் மற்றும் ஸ்டொய்னிஸ் முதலிய ஸ்டார் வீரர்கள் எப்போதும் போல இடம்பெற்றுள்ளனர்.
சாம்பியன்ஸ் டிரோபிக்கான ஆஸ்திரேலியா அணி:
பாட் கம்மின்ஸ் (கேப்டன்), அலெக்ஸ் கேரி, நாதன் எல்லிஸ், ஆரோன் ஹார்டி, ஜோஷ் ஹேசில்வுட், டிராவிஸ் ஹெட், ஜோஷ் இங்கிலிஸ், மார்னஸ் லபுசனே, மிட்செல் மார்ஷ், கிளென் மேக்ஸ்வெல், மேட் ஷார்ட், ஸ்டீவ் ஸ்மித், மிட்செல் ஸ்டார்க், மார்கஸ் ஸ்டோனிஸ், ஆடம் ஜாம்பா.