செய்தி விளையாட்டு

CT Match 07 – மழை காரணமாக தென் ஆப்பிரிக்கா மற்றும் ஆஸ்திரேலியா போட்டி ரத்து

சாம்பியன்ஸ் டிராபி தொடரில் பி பிரிவில் பலம் வாய்ந்த தென் ஆப்பிரிக்கா மற்றும் ஆஸ்திரேலியா அணி இன்று மோத இருந்தது.

பி பிரிவில் யார் செல்லப் போகிறார் என்பதற்கு இந்த போட்டி மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருந்தது. ஏற்கனவே இரு அணிகளும் தாங்கள் விளையாடிய முதல் போட்டியில் வெற்றி பெற்றுவிட்டது.

இதனால் இன்றைய ஆட்டத்தில் யார் வெற்றி பெறுகிறார்களோ அவர்கள் அரையிறுதிக்கு செல்ல அதிக வாய்ப்பு இருந்தது.

இந்த நிலையில் யாருமே எதிர்பாராத வகையில் ராவல்பிண்டியில் மழையால் ஆட்டம் பாதிக்கப்பட்டிருக்கிறது. இதனால் போடுவதில் தாமதம் ஏற்பட்டது.

இதன் காரணமாக இன்றைய ஆட்டத்தில் ஓவர்கள் குறைக்கப்பட அதிக வாய்ப்பு இருந்தது. குறைந்தபட்சம் 20 அல்லது 25 ஓவர்கள் போட்டியாவது நடைபெறும் என எதிர்பார்க்கப்பட்டது.

இந்நிலையில் ஒரு பந்து கூட வீச முடியாத நிலையில் ஆட்டம் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டது. இரு அணிகளுக்கும் தலா ஒரு புள்ளிகள் வழங்கப்பட்டுள்ளது.

இதனால் பி பிரிவில் தென்னாபிரிக்கா மற்றும் ஆஸ்திரேலியா என இரு அணிகளும் மூன்று புள்ளிகள் பெற்றுள்ளது.

(Visited 44 times, 1 visits today)

KP

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி