இத்தாலியின் பிரபலமான சுற்றுலா பகுதியில் ஒன்று கூடிய மக்கள் : போக்குவரத்து பாதிப்பு

இத்தாலியன் நகரத்தில் மே தின வங்கி விடுமுறையின் போது பல்லாயிரக்கணக்கான மக்கள் வீதிகளில் ஒன்று திரண்டுள்ளனர்.
இத்தாலியில் உள்ள கார்டா ஏரியின் அழகிய கரையில் வெறும் 8,000 குடியிருப்பாளர்கள் மட்டுமே வசிக்கும் சிர்மியோனின் குறுகிய தெருக்களில் ஏராளமான பயணிகள் ஒன்று திரண்டனர்.
இதனை அடுத்து வீதிகளில் போக்குவரத்து தடைப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ரோமானிய இடிபாடுகளுக்கு பெயர் பெற்ற இந்த இடம், பல வெப்ப குளியல் தொட்டிகள் மற்றும் 13 ஆம் நூற்றாண்டின் கம்பீரமான ஸ்காலிகெரோ கோட்டையைக் கொண்டுள்ளது.
இந்நிலையில் குறித்த பகுதியை பார்வையிட வந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் 40 நிமிடங்கள் காத்திருந்ததாகவும் அறிய முடிகிறது.
(Visited 1 times, 1 visits today)