17 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் கட்டாய இராணுவ சேவையை அறிமுகப்படுத்தும் குரோஷியா
அதிகரித்து வரும் உலகளாவிய பதற்றங்களுக்கு மத்தியில் நாட்டின் பாதுகாப்பை அதிகரிக்க கட்டாய இராணுவ சேவையை மீண்டும் அறிமுகப்படுத்த குரோஷிய (Croatia) சட்டமன்ற உறுப்பினர்கள் வாக்களித்துள்ளனர்.
தனது இராணுவத்தை தொழில்முறைமயமாக்கும் முயற்சியில், நேட்டோவில் (NOTO) சேருவதற்கு ஒரு வருடம் முன்பு, 2008ல் குரோஷியா கட்டாய இராணுவ சேவையை ரத்து செய்தது.
இந்நிலையில், இந்த முயற்சி அடுத்த ஆண்டு தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இரண்டு மாத பயிற்சி பெறுவதற்காக 18 வயதை பூர்த்தி செய்த சுமார் 18,000 ஆண்கள் ஆண்டுதோறும் சேர்க்கப்படுவார்கள் என்று பாதுகாப்பு அமைச்சர் இவான் அனுசிக் (Ivan Anusic) குறிப்பிட்டுள்ளார்.
மேலும், இராணுவ வீரர்கள் தங்கள் சேவை முடிந்த பிறகு பொது மற்றும் அரசு நிறுவனங்களில் வேலைகளுக்கு விண்ணப்பிக்கும்போது முன்னுரிமையும் பெறுவார்கள்.
வழக்கமான இராணுவ வீரர்கள் மாதத்திற்கு €1,100 பெறுவார்கள், அதே நேரத்தில் சிவில் சேவையில் பணியாற்றுபவர்களுக்கான தொகை இன்னும் தீர்மானிக்கப்படவில்லை.




