ஐரோப்பா

UKவில் அண்மையில் இரத்த பரிசோதனைகளை மேற்கொண்டவர்களுக்கு ஏற்பட்ட நெருக்கடி : மீளவும் அழைக்கும் NHS!

பிரித்தானியாவில் அண்மையில் இரத்த பரிசோதனைகளை மேற்கொண்ட 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்களை மீளவும் தொடர்புகொள்ள அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.

வர இருக்கும் வாரத்தில் அவர்களை தொடர்பு கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Bedfordshire Hospitals NHS அறக்கட்டளை சமீபத்தில் அதன் இரத்த பரிசோதனை இயந்திரம் ஒன்றில் காணப்பட்ட பிரச்சனை ஒன்றை வெளிப்படுத்தியுள்ளது.

இந்த இயந்திரம் லூடன் மற்றும் டன்ஸ்டபிள் பல்கலைக்கழக மருத்துவமனையில் HbA1c இரத்த பரிசோதனைகள் மற்றும் நீரிழிவு நோய்க்கான சோதனைகளை மேற்கொள்கிறது.

இந்நிலையில் இந்த பரிசோதனையின் பெறுபேறுகள் நோயாளிகளுக்கு கலவையான முடிவுகளை வெளிப்படுத்தியிருக்கலாம் எனக் கூறப்படுகிறது.

இதன்விளைவாக குறித்த இயத்திரத்தை சீரமைத்துள்ள நிலையில் மீண்டும் பரிசோதனைகளை மேற்கொள்ள வேண்டும் எனவும், நோயாளிகளுக்கு அழைப்பை மேற்கொள்ளவுள்ளதாகவும் சுகாதார அதிகாரிகள் கூறியுள்ளனர்.

VD

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்
error: Content is protected !!