செய்தி விளையாட்டு

இந்திய அணியில் நெருக்கடி – ரோஹித், கம்பீரிடம் விசாரணை நடத்த BCCI திட்டம்

ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் டெஸ்ட் போட்டிகளில் இந்திய அணி தொடர்ச்சியாக தோல்வியை சந்தித்து வருகிறது. இதுகுறித்தும், ஆல்ரவுண்டர் அஸ்வின் ஓய்வு அறிவித்தது தொடர்பாகவும் ரோஹித் சர்மா மற்றும் கவுதம் காம்பீரிடம் விசாரணை நடத்துவற்கு பிசிசிஐ முடிவு செய்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஆஸ்திரேலியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் 4 போட்டிகள் முடிந்துள்ள நிலையில் 1 போட்டியில் வெற்றியும், 2 போட்டியில் தோல்வியும் அடைந்துள்ள இந்திய அணி 1 போட்டியை டிரா செய்திருந்தது.

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் போட்டிகளில் தோல்வியடைந்து வருவதால் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு இந்தியா தகுதி பெறும் வாய்ப்புகள் குறைந்துள்ளன.

இதேபோன்று ஆல்ரவுண்டர் ரவிச்சந்திரன் அஷ்வின் நல்ல ஃபார்மில் இருந்த நிலையில் திடீரென அவர் ஓய்வை அறிவித்தார். அதற்கு அவர் அவமானப்படுத்தப்பட்டது காரணமாக இருக்கலாம் என்று அவரது தந்தை கூறியிருந்தது பரபரப்பை ஏற்படுத்தியது.

அதிக அனுபவம் இல்லாத பும்ராவின் தலைமையின் கீழ் இந்திய அணி முதல் போட்டியில் வெற்றி பெற்றிருந்த நிலையில், ரோஹித் சர்மா தலைமையேற்ற 3 போட்டிகளில் இந்திய அணி 2 போட்டிகளில் தோல்வியும், 1 போட்டியில் டிராவு செய்துள்ளது.

இதேபோன்று கே.எல். ராகுலுக்கு அதிக வாய்ப்புகள் வழங்கியது, 6 ஆவது வீரராக முதலில் களம் இறங்கி பின்னர் தொடக்க ஆட்டக்காரராக ரோஹித் சர்மா விளையாடினார். சுப்மன் கில்லை அணியில் எடுக்காதது, ப்ளேயிங் 11 வீரர்களை சரியாக தேர்வு செய்யாதது என ரோஹித் மீது அடுத்தடுத்து விமர்சனங்கள் எழுந்து வருகின்றன.

இவை அனைத்துக்கும் மேலாக சீனியர் பேட்ஸ்மேனான அவர், இந்த தொடரில் ஒரு அரைச்சதம் கூட எடுக்கவில்லை. மேலும் கடந்த 15 இன்னிங்ஸ்களில் அவர் மொத்தமே 164 ரன்கள் எடுத்திருக்கிறார்.

இதேபோன்று அஸ்வின் ஒய்வை அறிவித்ததற்கு கவுதம் காம்பீர் காரணமாக இருக்கலாம் என்றும் விமர்சனங்கள் எழுந்துள்ளன. இந்நிலையில் இருவர் மீது விசாரணை நடத்துவதற்கு பிசிசிஐ திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன.

(Visited 33 times, 1 visits today)

SR

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி