TikTok வீடியாவால் ஐஸ்லாந்தில் ஏற்பட்டுள்ள நெருக்கடி

ஐஸ்லாந்தில் உள்ள சுப்பர் மார்க்கெட்களில் வெள்ளரிக்காய்களுக்கு கடுமையான தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
அரைத்த வெள்ளரிக்காய், எள் எண்ணெய், பூண்டு, அரிசி வினிகர், மிளகாய் எண்ணெய் ஆகியற்றை வைத்து சாலட் செய்யும் முறையை ஐஸ்லாந்தைச் சேர்ந்த சமூக ஊடகப் பிரபலங்கள் TikTok தளத்தில் பகிர்ந்தனர்.
அதனைத் தொடர்ந்து வெள்ளரிக்காய்களை மக்கள் அதிக அளவில் வாங்கத் தொடங்கியுள்ளனர்.
இந்த நிலையில் அதிகரித்துவரும் தேவையைப் பூர்த்திசெய்ய விவசாயிகள் சிரமப்படுகின்றனர்.
வெள்ளரிக்காய்களின் விற்பனை இரட்டிப்பானதாக Hagkaup மார்க்கெட்களின் தலைமை அதிகாரிகள் தெரித்துள்ளனரடஇ
சாலட்டைச் செய்யத் தேவைப்படும் மற்ற பொருள்களும் விற்றுத் தீர்வதாக குறிப்பிடப்படுகின்றது.
(Visited 29 times, 1 visits today)