அமெரிக்காவின் வரி விதிப்பினால் இலங்கைக்கு காத்திருக்கும் நெருக்கடி

இலங்கை மீது அமெரிக்கா 44 சதவீத வரி விதிப்பை கொள்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இதனால் நாட்டின் பொருளாதாரம் பாதிப்படையும் சாத்தியம் நிலவுவதாக பேராதனை பல்கலைக்கழகத்தின் பொருளாதாரம் மற்றும் புள்ளியியல் கற்கை பிரிவின் பேராசிரியர் வசந்த அத்துகோரள தெரிவித்தார்.
அமெரிக்காவின் நடவடிக்கையானது இலங்கையில் உள்ள சில தொழிற்சாலைகளை மூடுவதற்கு வழிவகுக்கும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பினால் மேற்கொள்ளப்பட்டுள்ள வரிவிதிப்பானது இலங்கையின் எதிர்கால பொருளாதாரத்திற்கு பாதகமான சமிக்ஞையை காட்டுகின்றது.
விசேடமாக இலங்கையின் ஏற்றுமதியில் 25 சதவீதத்திற்கும் அதிகமானவை அமெரிக்காவைச் சென்றடைகின்றன.
ஏனைய நாடுகளுக்கு இணையாக, இலங்கை மீதான வரி விதிப்பின் மூலம் நாட்டின் ஏற்றுமதி வருமானம் வீழ்ச்சியை எதிர்கொள்ளும் நிலை காணப்படுவதாகவும் பேராசிரியர் வசந்த அத்துகோரள தெரிவித்துள்ளார்.