மின் கட்டண உயர்வால் எரிபொருள் நிரப்பு நிலையங்களில் நெருக்கடி
18 சதவீத மின் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளதால், எதிர்காலத்தில் எரிபொருள் நிரப்பு நிலையங்களை இயக்குவதில் சிக்கல் ஏற்படும் என பெட்ரோலிய விநியோகஸ்தர்கள் சங்கம் (பிடிஏ) தெரிவித்துள்ளது.
தற்போதைய பொருளாதார சூழ்நிலையில் எரிபொருள் விற்பனை ஏற்கனவே கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளதாக சங்கத்தின் இணைச் செயலாளர் கபில நாவுதுன்ன தெரிவித்தார்.
நாட்டில் உள்ள அனைத்து தொழிற்சாலைகள் மற்றும் எரிபொருள் நிரப்பு நிலையங்களிலும் இப்பிரச்சினை காணப்படுவதாக அவர் தெரிவித்துள்ளார்.
அதன்படி, எரிபொருள் நிரப்பு நிலையங்களில் செலவுகள் அதிகரித்து வருவதாகவும், தினசரி விற்பனை குறைந்து வருவதாகவும் நாவுதுன்ன குறிப்பிட்டார்.
ஆனால், எரிபொருள் விலையை நாளாந்தம் திருத்தியமைக்கும் அரசாங்கத்தின் தீர்மானம் மகிழ்ச்சியளிப்பதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார். இது மக்களுக்கு பெரும் சேவையாக அமையும் என்றார்.