பியுமாவை தடுத்து வைத்து விசாரிக்க குற்றப் புலனாய்வுப் பிரிவினருக்கு அனுமதி!

டுபாயில் கைது செய்யப்பட்டு நேற்று (15) இலங்கைக்கு அழைத்து வரப்பட்ட பாதாள உலகக் குழு உறுப்பினர் என சந்தேகிக்கப்படும் “பியுமா”வை தடுத்து வைத்து விசாரணை செய்ய குற்றப் புலனாய்வுப் பிரிவினருக்கு நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.
பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ், குற்றப் புலனாய்வுப் பிரிவினர் கோட்டை நீதவான் நீதிமன்றில் இது தொடர்பில் சமர்ப்பணங்களை முன்வைத்திருந்தனர்.
குறித்த 72 மணிநேரம் நேற்றிலிருந்து கணக்கிடப்படுகிறது.
பியூமி ஹஸ்திக என்ற ‘பியுமா’ குடு சலிந்துவின் என்ற போதைப்பொருள் வியாபாரியின் முக்கிய உதவியாளராக கருதப்படுகிறார்.இவர் 2021 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 09 ஆம் திகதி துபாய் நோக்கி தப்பிச் சென்றது தெரியவந்துள்ளது.
(Visited 21 times, 1 visits today)