களுத்துறையில் நீரில் மூழ்கி குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரி மரணம்
களுத்துறை கட்டுகுருந்த கடற்கரையில் தனது நண்பர்கள் குழுவுடன் கடலில் குளித்துக் கொண்டிருந்த குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் (CID) பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
22 வயதுடைய தேஷாஞ்சன தரிந்த என்ற பொலிஸ் உத்தியோகத்தர் களுத்துறை நாகொட பிரதேசத்தில் வசிப்பவர் என பொலிஸார் தெரிவித்தனர்.
பலத்த நீரோட்டத்தில் கான்ஸ்டபிள் இழுத்துச் செல்லப்பட்டு நீரில் மூழ்கிய போது, அவருடன் இருந்த ஏனைய நபர்கள் உதவி கோரி சத்தமிட்டுள்ளனர்.
பின்னர், சம்பவ இடத்திற்கு வந்த பிரதேசவாசிகள் பலர் நீரில் மூழ்கி உயிரிழந்த நபரை வைத்தியசாலையில் அனுமதிப்பதற்கு நடவடிக்கை எடுத்துள்ளனர்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை களுத்துறை-தெற்கு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
(Visited 13 times, 1 visits today)





