கிரிக்கெட் உலகக் கிண்ணம்!! இந்தியாவின் புதிய சாதனை
ஒருநாள் உலகக் கோப்பையின் இறுதிப் போட்டி நேற்று நடந்து முடிந்துள்ளது. இறுதிப் போட்டியில் இந்தியா மற்றும் அவுஸ்திரேலியா அணிகள் மோதின.
போட்டி தொடங்கும் முன், உலகக் கோப்பையில் ஒரே அணி அதிக போட்டிகளில் விளையாடிய முதல் அணி என்ற சாதனைப் புத்தகத்தில் இந்திய அணி இணைந்தது.
இந்தப் போட்டியில் எந்த மாற்றமும் இல்லாமல் ஒரே அணியுடன் 7 ஆட்டங்களில் விளையாடியிருந்தது இந்தியா.
அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் திரண்டிருந்த மக்கள் கூட்டத்திற்கு மத்தியில், உலகக் கோப்பை போட்டி கண்கவர் வான் காட்சியுடன் தொடங்கியது.
போட்டியின் நாணய சுழற்சியில் வென்ற அவுஸ்திரேலிய முதலில் பந்துவீசியது. இந்திய அணித் தலைவர் ரோகித் சர்மா 31 பந்துகளில் 47 ஓட்டங்களை குவித்தார்.
இந்த தொடரில் 581 ஓட்டங்களை குவித்துள்ள அவர், உலகக் கிண்ண வரலாற்றில் தலைவரட ஒருவர் எடுத்த அதிகபட்ச ஓட்டங்களாக இது கருதப்பட்டது.
பத்தாவது ஓவருக்குப் பிறகு இந்திய அணி 97 பந்துகளை பவுண்டரிகள் இன்றி எதிர்கொண்டது.
இந்த உலகக் கோப்பையில் அதிக பந்துகளை சந்தித்து பவுண்டரி அடிக்காமல் இருந்த இரண்டாவது சந்தரப்பமாக இது கருதப்பட்டது.
மேலும், 11வது ஓவரில் இருந்து 40வது ஓவர் வரை இந்திய வீரர்கள் 2 பவுண்டரிகளை மட்டுமே அடித்தனர். 2016க்குப் பிறகு இப்படடியான சந்தர்ப்பதம் இதுவே முதல்முறையாகக் கருதப்படுகிறது.
இருப்பினும், விராட் கோலி மற்றும் கே.எல்.ராகுல் ஆகியோர் நான்காவது விக்கெட்டுக்கு 67 ஓட்டங்களை சேர்த்தனர்.
பந்துவீச்சில் மிட்செல் ஸ்டக் 03 விக்கெட்டுக்களையும், பாட் கம்மின்ஸ் மற்றும் ஜோஸ் ஹேசில்வுட் ஆகியோர் தலா 02 விக்கெட்டுக்களையும் கைப்பற்றினர்.
ஆடம் சம்பா ஒரு விக்கெட்டை வீழ்த்தினார், இதன் மூலம் அவர் இந்த போட்டியில் எடுத்த விக்கெட்களின் எண்ணிக்கை 23 ஆகும்.
இதன்படி, 2007ஆம் ஆண்டு முத்தையா முரளிதரன் 23 விக்கெட்டுகளை வீழ்த்தி உலகக் கோப்பையில் அதிக விக்கெட் வீழ்த்திய சுழல் பந்து வீச்சாளர் வீரர் என்ற சாதனையை ஆடம் சம்பா சமன் செய்தார்.
இறுதியில் இந்திய வீரர்கள் அனைவரும் 50 ஓவர்கள் முடிவில் 240 ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்தனர்.
இந்திய இன்னிங்ஸ் முடிவில், போட்டியில் வெற்றி பெறுவதற்கான வாய்ப்பு ஆஸ்திரேலியாவுக்கு 67 சதவீதமாகவும், இந்தியாவுக்கு 33 சதவீதமாகவும் இருந்தது.
இறுதியில் அவுஸ்திரேலியா நான்கு விக்கெட்டுகளை இழந்து அபார வெற்றியை பதிவு செய்திருந்தது.