விளையாட்டு

2024ஆம் ஆண்டின் சிறந்த டெஸ்ட் அணி: கிரிக்கெட் ஆஸ்திரேலியா வெளியிட்டுள்ள அணி

உலகின் நம்பர் 1 டெஸ்ட் பவுலராக இருந்துவரும் ஜஸ்பிரித் பும்ரா, இந்தாண்டு தன்னுடைய 200வது டெஸ்ட் விக்கெட்டை வீழ்த்தி அசத்தினார். இந்தாண்டு மட்டும் 13 போட்டிகளில் விளையாடி 71 விக்கெட்டுகளை வீழ்த்தியிருக்கும் ஜஸ்பிரித் பும்ரா, 2024-ல் அதிக டெஸ்ட் விக்கெட்டுகளை வீழ்த்தியவர்கள் பட்டியலிலும் முதலிடத்தில் உள்ளார். இரண்டாவது இடத்தில் 11 போட்டிகளில் 52 விக்கெட்டுகளுடன் இங்கிலாந்தின் அட்கின்ஸன் நீடிக்கிறார்.

அதேபோல ஆஸ்திரேலியாவில் நடந்துவரும் பார்டர் கவாஸ்கர் தொடரில் 8 இன்னிங்ஸில் விளையாடி 30 விக்கெட்டுகளை வீழ்த்தியிருக்கும் பும்ரா லீடிங் விக்கெட் டேக்கராக நீடிக்கிறார். அவருக்கு அடுத்த இடத்தில் 20 விக்கெட்டுகளுடன் ஆஸ்திரேலியா கேப்டன் பாட் கம்மின்ஸ் நீடிக்கிறார். பார்டர் கவாஸ்கர் தொடரில் அதிக விக்கெட்டை வீழ்த்திய ஹர்பஜன் சிங்கின் ரெக்கார்டை உடைக்க இன்னும் 3 விக்கெட்டுகளே தேவையாக உள்ளது.

இந்நிலையில் 2024-ம் ஆண்டுக்கான சிறந்த டெஸ்ட் அணியை அறிவித்திருக்கும் கிரிக்கெட் ஆஸ்திரேலியா, இந்தியாவின் சூப்பர் ஸ்டார் பந்துவீச்சாளரான ஜஸ்பிரித் பும்ராவை கேப்டனாக பெயரிட்டுள்ளது.

கிரிக்கெட் ஆஸ்திரேலியா அறிவித்திருக்கும் 2024-ம் ஆண்டுக்கான சிறந்த டெஸ்ட் அணிக்கு கேப்டனாக ஜஸ்பிரித் பும்ரா அறிவித்துள்ளார். அவரை தவிர மற்றொரு இந்திய வீரராக ஜெய்ஸ்வாலின் பெயர் இடம்பெற்றுள்ளது.

அதே நேரத்தில் அதிகபட்சமாக இங்கிலாந்தில் இருந்து ஜோ ரூட், பென் டக்கெட், ஹாரி ப்ரூக் என 3 வீரர்களின் பெயர் இடம்பெற்றுள்ளது. ஆஸ்திரேலியாவில் இருந்து அலெக்ஸ் கேரி மற்றும் ஹசல்வுட், நியூசிலாந்திலிருந்து ரச்சின் ரவிந்திரா மற்றும் மேட் ஹென்றி, இலங்கையிலிருந்து கமிந்து மெண்டீஸ் மற்றும் தென்னாப்பிரிக்காவிலிருந்து கேசவ் மகாராஜின் பெயர் இடம்பெற்றுள்ளது.

கிரிக்கெட் ஆஸ்திரேலியாவின் 2024-ம் ஆண்டுக்கான சிறந்த டெஸ்ட் அணி: யஷஸ்வி ஜெய்ஸ்வால், பென் டக்கெட், ஜோ ரூட், ரச்சின் ரவீந்திரா, ஹாரி புரூக், கமிந்து மெண்டிஸ், அலெக்ஸ் கேரி (WK), கேசவ் மகாராஜ், மாட் ஹென்றி, ஜஸ்பிரிட் பும்ரா (கேப்டன்), ஜோஷ் ஹேசில்வுட்.

SR

About Author

You may also like

இந்தியா விளையாட்டு

ராஜஸ்தான் வெற்றிபெற 155 ரன்களை இலக்காக நிர்ணயித்த லக்னோ

  • April 19, 2023
10 அணிகள் பங்கேற்றுள்ள 16-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. ஜெய்ப்பூரில் 26-வது லீக் ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ், லக்னோ சூப்பர்
இந்தியா விளையாட்டு

10 ரன்கள் வித்தியாசத்தில் லக்னோ அணி வெற்றி

  • April 19, 2023
10 அணிகள் பங்கேற்றுள்ள 16-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. ஜெய்ப்பூரில் நடைபெற்ற 26வது லீக் ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ், லக்னோ
error: Content is protected !!