காங்கோ ஜனநாயகக் குடியரசில் 25 வீரர்களுக்கு மரண தண்டனை விதித்த நீதிமன்றம்
காங்கோ ஜனநாயகக் குடியரசில் (DRC) M23 கிளர்ச்சியாளர்களுக்கு எதிராகப் போரிட்டு தப்பி ஓடியதாகக் குற்றம் சாட்டப்பட்ட 25 காங்கோ வீரர்களுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
வடக்கு கிவு மாகாணத்தில் உள்ள புடெம்போ இராணுவ நீதிமன்றம், எதிரியிடம் இருந்து தப்பிச் சென்றமை, போர்க் குண்டுகளை சிதறடித்தமை மற்றும் உத்தரவுகளை மீறியமை போன்றவற்றின் குற்றவாளிகளாகக் கருதப்பட்டு தண்டனைகளை வழங்கியது.
“நான் அவர்களை குற்றவாளிகளாகக் கண்டறிந்து அவர்கள் ஒவ்வொருவருக்கும் மரண தண்டனை விதிக்கிறேன்” என்று இராணுவ நீதிமன்றத்தின் தலைவர் கர்னல் கபேயா யா ஹனு தெரிவித்தார்.
ஒரு நாள் விசாரணையின் போது 27 வீரர்கள் மற்றும் அவர்களது நான்கு சிவிலியன் மனைவிகள் உட்பட மொத்தம் 31 பிரதிவாதிகள் இராணுவ நீதிமன்றத்தில் ஆஜராகியதாக பாதுகாப்பு வழக்கறிஞர்களில் ஒருவரான Jules Muvweko தெரிவித்தார்.
கொள்ளையடித்த குற்றத்திற்காக ஒரு ராணுவ வீரருக்கு 10 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட நிலையில் நான்கு பெண்களும் விடுவிக்கப்பட்டனர்.