பிரித்தானியாவில் புகலிடக் கோரிக்கையாளர்களுக்கு ஆதரவாக தீர்ப்பளித்த நீதிமன்றம்!
பிரித்தானியாவில் புகலிடம் கோருவோர் எசெக்ஸில் (Essex) உள்ள பெல் ஹோட்டலில் (Bell Hotel) தொடர்ந்து தங்க வைக்கப்படுவதற்கு ஆதரவாக நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்துள்ளது.
அண்மையில் அல்ஜீரிய புகலிடக் கோரிக்கையாளர் ஒருவர் 14 வயதுடைய சிறுமி ஒருவரை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியதை தொடர்ந்து நாடு முழுவதும் புலம்பெயர்ந்தோருக்கு எதிரான போராட்டங்கள் வெடித்தன.
இந்நிலையில் எப்பிங் ஃபாரஸ்ட் மாவட்ட கவுன்சில் (Epping Forest District Council ) புகலிடக் கோரிக்கையாளர்கள் குறித்த விடுதிகளில் தங்குவதை தடுக்க நீதிமன்றத்தை நாடியது.
புகலிடக் கோரிக்கையாளர்களுக்கு அங்கு இடமளிப்பது திட்டமிடல் விதிகளை மீறுவதாகக் கூறி விடுதியின் உரிமையாளருக்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த வழக்கை இன்று விசாரணைக்கு எடுத்துக்கொண்ட நீதிமன்றம் எப்பிங் ஃபாரஸ்ட் மாவட்ட கவுன்சிலின் கோரிக்கையை நிராகரித்து உத்தரவு பிறப்பித்துள்ளது.
இந்த விடயத்தில் தடை உத்தரவு பிறப்பிப்பது நியாயமானது அல்ல என நீதிபதி குறிப்பிட்டுள்ளார்.
புகலிடக் கோரிக்கையாளர்கள் குற்றம் அல்லது சமூக விரோத நடத்தைகளை மேற்கொள்கிறார்கள் என்ற வாதத்திற்கு முறையான சாட்சியங்களை மன்றுக்கு சமர்ப்பிக்கவில்லை எனவும் நீதிபதி சுட்டிக்காட்டியுள்ளார்.





