இலங்கை

மின்சார நுகர்வோர் சங்கத்தின் செயலாளர் 06 பேருக்கு நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு

போராட்டத்தின் போது பொலிஸாரால் கைது செய்யப்பட்ட 6 பேருக்கும் நீதிமன்றம் பிணை வழங்கியுள்ளது.

மின்சார நுகர்வோர் சங்கத்தின் செயலாளர் சஞ்சீவ தம்மிக்க உள்ளிட்ட 06 பேர் மினுவாங்கொடை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

மின் கட்டண அதிகரிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து கொழும்பு – திவுலப்பிட்டி பிரதான வீதியில் பாரிய போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.

குறித்த போராட்டம் மின்சார நுகர்வோர் சங்கத்தினால் இன்று காலை முன்னெடுக்கப்பட்டிருந்தது.

இதன்போதே மின்சார நுகர்வோர் சங்கத்தின் செயலாளர் சஞ்சீவ தம்மிக்க மற்றும் தேரரொருவர் உட்பட 6 பேரைப் பொலிஸார் கைது செய்ததால் அப்பகுதியில் பதற்றமான சூழல் நிலவியது என்பது குறிப்பிடத்தக்கது.

TJenitha

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்
error: Content is protected !!