இலங்கை வந்த விமானத்தில் சுவீடன் நாட்டவரின் மோசமான செயல் – அபராதம் விதித்த நீதிமன்றம்

விமானம் பறந்து கொண்டிருக்கும் போது விமானப் பணிப்பெண்ணை பாலியல் துஷ்பிரயோகம் செய்ய முயன்றதற்காக கொழும்பு நீதவான் நீதிமன்றம் சுவீடன் நாட்டவருக்கு 26,500 ரூபாய் அபராதம் விதித்துள்ளது.
இந்த உத்தரவை கொழும்பு மேலதிக நீதவான் ஹர்ஷன கெக்குனாவல பிறப்பித்துள்ளார்.
இந்த வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது, பிரதிவாதி சார்பில் ஆஜரான ஜனாதிபதி சட்டத்தரணி பிரியந்த நவன, இந்த சம்பவம் தொடர்பாக தனது கட்சிக்காரர் தற்போது மன உளைச்சலில் இருப்பதாக நீதிமன்றத்தில் தெரிவித்தார்.
சம்பவம் நடந்தபோது அவர் குடிபோதையில் இருந்ததாகவும், குற்றம் செய்யும் எண்ணம் அவருக்கு இல்லை எனவும் கூறிய ஜனாதிபதி வழக்கறிஞர், சம்பவம் குறித்து வருத்தம் தெரிவித்து குற்றத்தை ஒப்புக்கொள்வதாகவும் கூறினார்.
அதறகமைய, நீதிபதி 26,500 ரூபாய் அபராதம் விதித்தார். 26,500 ரூபாய் அபராதம் விதித்து, அபராதம் செலுத்தவில்லை என்றால் கூடுதலாக ஒரு மாத சிறைத்தண்டனை விதிக்கப்படும் எனவும் கூறினார்.
விமான நிலைய பொலிஸார் இந்த குற்றவாளியை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.