சீனாவில் அதிக குழந்தைகளைப் பெற்றுக்கொள்ளும் தம்பதிகளுக்கு அதிஷ்டம்
சீனாவில் தம்பதிகள் அதிக குழந்தைகளைப் பெற்றுக்கொள்ள ஊக்குவிக்கும் வகையில் பல்வேறு சலுகைகளை சீன அறிவித்துள்ளது.
சரிந்துவரும் மக்கள் தொகையை அதிகரிக்க, இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.
குழந்தைப்பேறு மானியம், பராமரிப்பு சேவை, மகப்பேறு விடுமுறை, மருத்துவ வசதி, காப்பீடு, கல்வி, வீட்டு வசதி, வேலைவாய்ப்பு, வருமான வரிச் சலுகை என 13 வகையான சலுகைகளை சீன அரசு அறிவித்துள்ளது.
ஒரு குடும்பத்துக்கு ஒரு குழந்தை திட்டம் கொண்டுவரப்பட்டதால் மக்கள் தொகை வெகுவாகக் குறைந்தது.
இதையடுத்து, 2016-ல் இத்திட்டம் ரத்து செய்யப்பட்டு, 3 குழந்தைகள் பெற்றுக்கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டது.
(Visited 10 times, 1 visits today)