15 ஆண்டுகளாக பிரிந்து வாழும் தம்பதி – வெவ்வேறு நாடுகளில் வாழ்ந்தாலும் உறுதியுடன் உறவு

திருமணத்திற்கு பிறகும் வெவ்வேறு நாடுகளில் வாழ்ந்தாலும், உறவை உறுதியுடன் வைத்து கொண்டு மகிழ்ச்சியாக வாழும் ஒரு தம்பதி பற்றி தகவல் வெளியானது.
பெண்களுக்கான தனிப்பட்ட நிகழ்ச்சியில் இந்த விடயம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
மனைவி மார்கரெட் இங்கிலாந்தில் வாழ்கிறார். கணவர் பீட்டர் ஆஸ்திரேலியாவைத் தற்காலிகமாகத் தங்குமிடமாகக் கொண்டுள்ளார். இந்த அமைப்பினைப் பற்றி பேசும் மார்கரெட், “பிரிந்து வாழ்ந்தாலும் திருமண உறவு திருப்திகரமாக இருக்க முடியும்” என தெரிவித்துள்ளார்.
மார்கரெட் 57வது வயதில் பல்கலைக்கழகத்தில் மீண்டும் படிக்க தீர்மானிக்க, பீட்டர் தொடர்ந்து வேலை செய்ய விரும்பினார். வாழ்க்கை இலக்குகளில் வேறுபாடுகள் இருந்ததால் இருவரும் பரஸ்பர ஒப்புதலுடன் பிரிந்து வாழ தீர்மானித்தனர். இருப்பினும் அவர்களுக்கிடையே உள்ள உறவு எந்தவித சீர்கேடும் இன்றி தொடர்கிறது.
“பிரிந்து வாழ்வதால், எங்கள் இருவருக்கும் விருப்பமான நடவடிக்கைகளில் சுதந்திரமாக ஈடுபட முடிகிறது,” என்று மார்கரெட் கூறுகிறார். இது அவர்களின் தனிப்பட்ட வளர்ச்சிக்கும் இடமளித்துள்ளதாக அவர் சொல்கிறார்.
தினசரி தொலைபேசியில் உரையாடும் இத்தம்பதியினர், இந்த ஏற்பாட்டின் மூலம் தனிமையை உணராமல், தங்களுக்கேற்ற வாழ்வை தேர்ந்தெடுத்து மகிழ்ச்சியுடன் வாழ்ந்து வருகின்றனர்.