ஐரோப்பா செய்தி

பிரித்தானியாவில் ஒளிந்திருந்த புலம்பெயர்ந்த சிறுவன் – 1500 பவுண்டு அபராதம் பெற்ற தம்பதி

பிரித்தானியாவில் தங்களது வாகனத்தில் ஒளிந்திருந்த 16 வயது புலம்பெயர்ந்தவரை பற்றி முறைப்பாடு கொடுத்த தம்பதிக்கு 1,500 பவுண்டு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

வாகனத்தில் இருந்த மிதிவண்டிகளுக்குப் போடப்பட்டிருந்த உறையினுள் சிறுவன் மறைந்திருந்ததைத் தம்பதி கண்டதும் பொலிஸாரிடம் முறைப்பாடு செய்துள்ளனர்.

பிரான்ஸிலிருந்து அவர்கள் பிரித்தானியாவுக்கு பயணம் மேற்கொண்டனர். ஆனால், சிறுவன் வாகனத்தில் ஏறியதை அவர்கள் கவனிக்கவில்லை.

எல்லைகளைக் கடந்தபோது அதிகாரிகளும் வண்டியில் மிதிவண்டிகள் இருந்த பகுதியைச் சோதனை செய்யவில்லை.

பயணம் முடிந்து வீடு திரும்பிய பின்புதான் அந்த சிறுவன் அவர்கள் வாகனத்தில் ஒளிந்திருந்ததை அறிந்தனர்.

சட்டவிரோதமாக ஒருவர் வாகனத்தில் ஒளிந்துகொண்டு எல்லையைக் கடப்பதைத் தடுக்கத் தவறியதற்கு உள்துறை அலுவலகம் அவர்களுக்கு அபராதம் விதித்தது.

சட்டத்தை மீறியவர் பற்றி புகார் கொடுத்ததற்கு அநியாயமாகத் தண்டிக்கப்பட்டுள்ளதாய்த் தம்பதி வருத்தப்பட்டனர். அபராதத்திற்கு எதிராக மேல்முறையீடு செய்யப்போவதாக அவர்கள் தெரிவித்தனர்.

SR

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!