வேகமாக வளர்ந்து வரும் பொருளாதாரங்களைக் கொண்ட நாடுகள் – இலங்கைக்கு இடமில்லை
வேகமாக வளர்ந்து வரும் பொருளாதாரங்களைக் கொண்ட நாடுகளின் பட்டியலில் இலங்கை இடம்பெறவில்லை என தெரிவிக்கப்படுகிறது.
இந்த பட்டியலில் முதல் 30 நாடுகள் இடம்பெற்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அந்த பட்டியலை உலக புள்ளிவிபர நிறுவனம் வெளியிட்டுள்ளது.
2025 ஆம் ஆண்டில் மொத்த உள்நாட்டு உற்பத்தி (GDP) வளர்ச்சி கணிப்பை அடிப்படையாகக் கொண்டு இந்த பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
குறித்த பட்டியலில் தென் சூடான் முன்னிலையில் உள்ளது. அந்த நாடு 24.3 சதவீதம் வளர்ச்சி வீதத்தைப் பெற்றுள்ளது.
தென் சூடானை அடுத்து லிபியா 15.6 சதவீதமும், கயானா 10.3 சதவீதமும், அயர்லாந்து 9.1 சதவீதமும் பெற்று இடம்பிடித்துள்ளன.
எனினும், குறித்த பட்டியலில் இலங்கை இடம்பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.





