ஆசியா

இந்தோனேசியாவில் 300 சிறார்களின் உயிரைப் பறித்த இருமல் மருந்து..!

இந்தோனேசியாவில் 200க்கும் மேற்பட்ட சிறார்களின் இறப்புக்கு காரணமான இருமல் மருந்து தயாரிப்பு நிறுவனத்தின் உயர்மட்ட தலைவர்கள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.தொடர்புடைய நிறுவனத்தின் தலைவர் உட்பட நால்வருக்கு அபராதமாக சுமார் 51,786 பவுண்டுகள் தொகையும் விதிக்கப்பட்டுள்ளது.

Afi Farma என்ற நிறுவனம் தயாரித்துள்ள இருமல் மருந்தில் அளவுக்கு அதிகமான நச்சுப்பொருட்கள் கண்டறியப்பட்டுள்ளதுடன், குறித்த இருமல் மருந்தால் சுமார் 100 சிறார்கள் கொல்லப்பட்டனர்.2022 முதல் இந்த நிறுவனத்தின் இருமல் மருந்தால் 200க்கும் அதிகமான இந்தோனேசிய சிறார்கள் மரணமடைந்துள்ளதும் கண்டறியப்பட்டுள்ளது.

மேலும், குறித்த இருமல் மருந்தால் ஐந்து வயதுக்கு உட்பட்ட நூற்றுக்கணக்கான குழந்தைகள் மரணமடைந்துள்ளதும் தெரியவந்தது. சிறுநீரக சிக்கல் ஏற்பட்டு, குழந்தைகள் மரணமடைந்துள்ளனர்.மட்டுமின்றி, காம்பியா மற்றும் உஸ்பெகிஸ்தானிலும் தொடர்புடைய இரும்ல் மருந்தால் குறைந்தது 100 குழந்தைகள் இறந்துள்ளனர்.

இதனிடையே, மருந்து தயாரிப்பாளர்கள் மூலப்பொருட்களின் சோதனையை மேற்கொள்ள வேண்டிய அவசியமில்லை என இந்தோனேசியாவின் மருந்து கட்டுப்பாட்டாளர் தரப்பு கூறியுள்ளதாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ள நிறுவனத்தின் சட்டத்தரணிகள் வாதிட்டுள்ளனர்.இருப்பினும், பாதுகாப்புத் தரங்களைச் சந்திக்காத மருந்துப் பொருட்களை வேண்டுமென்றே உற்பத்தி செய்ததாக கூறி, அந்த நால்வரும் குற்றவாளிகள் என நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

(Visited 14 times, 1 visits today)

Mithu

About Author

You may also like

ஆசியா செய்தி

கொரிய நாட்டவர் போல் தெரிவதற்காக நபர் ஒருவர் செய்த அதிர்ச்சி செயல்

தாய்லந்தைச் சேர்ந்த போதைப்பொருள் கடத்தல்காரர் ஒருவரின் செயற்பாடு அதிர்ச்சியை ஏற்பட்டுள்ளது. அவர் கொரியாவைச் சேர்ந்த கவரத்தக்க நபர் போல் தோற்றமளிக்க பல்வேறு ஒட்டுறுப்பு அறுவைச் சிகிச்சைகளைச் (plastic
ஆசியா செய்தி

25 போர் விமானங்கள், 03 போர் கப்பல்கள் மூலம் தைவானை ஊடுறுத்த சீனா!

வொஷிங்கடனுக்கும் பீஜிங்கிற்கும் இடையிலான பதற்றங்கள் அதிகரித்துள்ள நிலையில், சீனா இன்றைய தினம் தைவானுக்கு தனது 25 போர் விமானங்கள் மற்றும் மூன்று போர்கப்பல்களை அனுப்பியதாக பாதுகாப்பு அமைச்சகம்