அரசியல் இலங்கை செய்தி

கொழும்பு மாநகரசபையில் ஊழல்: விசாரணைக்குழு நியமனம்: ஜனாதிபதி அதிரடி!

கொழும்பு மாநகர சபையில் கடந்த காலங்களில் இடம்பெற்றதாகக் கூறப்படும் ஊழல், மோசடிகள் தொடர்பில் விசாரணை செய்வதற்காக ஜனாதிபதி ஆணைக்குழு நியமிக்கப்பட்டுள்ளது.

மேல் நீதிமன்றத்தின் முன்னாள் நீதிபதி பியசேன ரணசிஹ்க தலைமையில் அமைக்கப்பட்டுள்ள இக்குழுவில் மூவர் இடம்பெற்றுள்ளனர்.

முன்னாள் சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் டி.எஸ். விக்கிரமசிங்ஹ, கணக்காய்வாளர் சேவை அதிகாரி ஏக்க நாயக்க ஆகியோரும் மேற்படி குழுவுக்கு பெயரிடப்பட்டுள்ளனர்.

இது தொடர்பான விசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.

2010 முதல் 2025 வரையான காலப்பகுதியில் கொழும்பு மாநகர சபையில் இடம்பெற்றுள்ளதாகக் கருதப்படும் ஊழல், மோசடி, சொத்துக்களின் குற்றவியல் ரீதியான கையாடல் உள்ளிட்ட விடயங்கள் தொடர்பில் இக்குழு விசாரணை நடத்தவுள்ளது.

அதன்பின்னர் தனது பரிந்துரை அறிக்கையை குழு, ஜனாதிபதியிடம் கையளிக்கும்.

Dila

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
error: Content is protected !!