செய்தி

கொரோனா வைரஸ் ஆய்வுக்கூடத்திலிருந்து கசிந்திருக்கலாம் – அமெரிக்க அதிகாரிகள் தகவல்

COVID-19 நோய்த்தொற்றுக்குக் காரணமான கொரோனா வைரஸ் ஆய்வுக்கூடத்திலிருந்து கசிந்திருக்கலாம் என்று அமெரிக்க அதிகாரிகள் நம்புகின்றனர்.

எனினும் வைரஸ் விலங்குகளிடமிருந்து பரவியதா, சீனாவின் ஆய்வுக்கூடத்திலிருந்து கசிந்ததா என்ற குழப்பம் தொடர்ந்து நீடிக்கிறது.

இந்த நிலையில் ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப்பின் புதிய நிர்வாகத்தின்கீழ் அமெரிக்காவின் புதிய மதிப்பீடு வந்துள்ளது.

இதுவரை மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளுக்கமைய, ஆய்வுக்கூடத்திலிருந்து கசிவு ஏற்பட்டதற்கான சாத்தியம் அதிகம் என்று மத்தியப் புலனாய்வுப் பிரிவு (CIA) குறிப்பிட்டுள்ளது.

COVID-19 சம்பவங்கள் சீனாவின் வூஹான் நகரில் முதன்முதலில் தோன்றின. அங்கு கொரோனா கிருமி ஆராய்ச்சி பெரிய அளவில் மேற்கொள்ளப்படுவதுண்டு.

அருகே உள்ள வௌவால் கூட்டங்கள் வூஹானிலிருந்து சுமார் 1,600 கிலோமீட்டர் தொலைவில் உள்ளன.

அவற்றின் வழி வைரஸ் பரவியதற்கான சாத்தியத்தையும் ஆராயவிருப்பதாக CIA கூறியுள்ளது.

SR

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!