ஜெர்மனியில் அச்சுறுத்தும் கொரோனா – கவலையில் சுகாதார பிரிவினர்
ஜெர்மனியில் பயண் மாநிலத்தில் மீண்டும் கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஜெரம்னியில் 14.08.2023 இல் பயண் மாநிலத்தில் அமைந்து இருக்கின்ற ஒரு முதியவர் இல்லத்தில் கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாக தெரியவந்திருக்கின்றது.
அதாவது எயர்லங்கன் என்ற பிரதேசத்தில் அமைந்து இருக்கின்ற ஒரு வயோதிப இல்லத்தில் இவ்வாறு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாகவும், இந்த கொரோனா தொற்றில் 27 முதியவர்கள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 9 பணியாளர்களுக்கும் இவ்வாறு தொற்று ஏற்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் இந்த கொரோனா நோய் தொற்றானது மிதமான தொற்றை ஏற்படுத்தியதாகவும் தெரியவந்துள்ளது.
இவ்வாறு இருக்க தற்பொழுது கொலோன் மாவட்ட நீதிமன்றத்தில் கொலோன் மற்றும் லங்கன்பயர் என்று சொல்லப்படுகின்ற பிரதேசங்களில் பிரத்தியேக கொரோனா தடுப்பு ஊசி மையங்களை திறந்ததாக கூறி சில மோசடி நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
அதாவது கொரோனா தடுப்பு ஊசி மையங்களை திறக்காது தாங்கள் 1.6 மில்லியன் கொரோனா சோதனைகளை மேற்கொண்டதாக தெரிவித்து பல லட்சக்கணக்கான பணத்தை மோசடி செய்து ஒரு கும்பல் மீது வழக்கு விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
அதாவது இந்த மோசடி கும்பலானது எவ்வகையான கொரோனா சோதனைகளையும் மேற்கொள்ளவில்லை என்றும், இந்நிலையில் இவர்கள் 16 லட்ச யுரோக்களை அரசாங்கத்திடம் இருந்து மோசடியாக பெற்றுக்கொண்டதாகவும் தெரியவந்திருக்கின்றுது.
விசேடமாக இதற்காக ஒரு வங்கி கணக்கை ஆரம்பித்ததாகவும் இந்த வங்கி கணக்கில் பல லட்சக்கணக்கான யுரோக்கள் வந்ததை முன்னிட்டு வங்கி நிர்வாகமானது அரச தரப்பு சட்டத்தரணியிடம் இந்த நடவடிக்கைகள் பற்றி தகவலை வழங்கியதாகவும் தெரியவந்து இருக்கின்றது.