ஐரோப்பா செய்தி

பிரித்தானியாவில் அடுத்தடுத்து விடுதலை செய்யப்பட்ட குற்றவாளிகள் – சுயாதீன விசாரணைக்கு உத்தரவு!

பிரித்தானியாவில் பாலியல் குற்றச்சாட்டில் சிறை தண்டனை அனுபவித்து வந்த அல்ஜீரிய (Algeria) பிரஜையான பிராஹிம் கடூர்-செரிஃப் (Brahim Kaddour-Cherif) ,    வில்லியம் ஸ்மித் (William Smith) ஆகிய குற்றவாளிகள் தவறுதலாக விடுதலை செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் குறித்த இருவரையும் தேடும் நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக பிபிசி செய்தி வெளியிட்டுள்ளது.

பாலியல் குற்றவாளியான அல்ஜீரிய நபர் பிரஹிம் கடூர்-செரிஃப் (Brahim Kaddour-Cherif) ,   அக்டோபர் 29 அன்று தவறுதலாக வாண்ட்ஸ்வொர்த் (Wandsworth) சிறையிலிருந்து விடுவிக்கப்பட்டார்.

அதேபோல் நவம்பர் மாதம் 03 ஆம் திகதி மோசடி குற்றவாளியான வில்லியம் ஸ்மித் (William Smith) தவறுதலாக விடுதலை செய்யப்பட்டார்.

முன்னதாக ஹடுஷ் கெபாடு ( Hadush Kebatu) என்ற குற்றவாளி தவறுதலாக விடுதலை செய்யப்பட்டு சில நாட்களுக்கு பிறகு கைது செய்யப்பட்டிருந்தார். இதனைத் தொடர்ந்து மேற்படி இரு சம்பவங்கள் பதிவாகியுள்ளன.

இவ்வாறான சம்பவங்கள் பிரித்தானியர்கள் மத்தியில் பாதுகாப்பு அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் ஊடகவியலாளர்கள் லாம்மியிடம் (Lammy) புலம்பெயர்ந்த குற்றவாளிகள் இவ்வாறாக விடுதலை செய்யப்பட்டுள்ளனரா என கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு லாம்மி பதிலளிக்க மறுத்துவிட்டார்.

இருப்பினும் இதுபோன்ற தோல்விகளைக் கட்டுப்படுத்த  டேம் லின் ஓவன்ஸ் தலைமையில் ஒரு சுயாதீன விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளேன்.” எனக் கூறியுள்ளார்.

இதற்கிடையே இது தொடர்பில் கருத்து வெளியிட்ட நீதி அமைச்சக செய்தித் தொடர்பாளர், குற்றவாளியின் குடியேற்ற நிலை உள்ளிட்ட முக்கிய விவரங்கள் துணைப் பிரதமருக்கு துல்லியமாகத் தெரிவிக்கப்படவில்லை எனக் குறிப்பிட்டுள்ளார்.

(Visited 6 times, 7 visits today)

VD

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!