அறிந்திருக்க வேண்டியவை

நிலவில் கட்டுமானங்கள், செவ்வாயில் நகரங்கள் – அதிரடி திட்டம் போடும் எலான் மஸ்க்

நிலவில் கட்டாயம் கட்டுமானங்களை எழுப்ப வேண்டும் என டெஸ்லா (Tesla) மற்றும் ஸ்பேஸ் எக்ஸின் (Space X) நிறுவனர் எலான் மஸ்க் தெரிவித்துள்ளார்.

மனிதர்களுக்கென சொந்தமாக ஒரு தளம் நிலவில் கண்டிப்பாக வேண்டும் என அவர் கூறியுள்ளார்.

மேலும், நிலவில் மனிதன் கால் வைத்து 50 ஆண்டுகள் ஆகிவிட்டது. அதன் பின் நிலவில் மனிதனின் கால்தடம் படவேயில்லை என்பது ஏமாற்றமும் வருத்தமும் அளிக்கிறது எனத் தன் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.

மேலும், 1903 ஆம் ஆண்டில் ரைட் சகோதரர்கள் வானில் செலுத்திய முதல் விமானத்தின் காணொலியுடன் தனது கருத்தைப் பகிர்ந்த அவர், நிலவில் மனிதர்களுக்கென தளமும், செவ்வாயில் நகரங்களும் உருவாக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.

பொதுவாக எலான் மஸ்க் தன் எக்ஸ் தளத்தில் ஒரு கருத்தைப் பதிவிட்டால் அது அவரது அடுத்த திட்டத்தைச் சார்ந்ததாகவே இருக்கும்.

இப்போது அவர் இப்படி பதிவிட்டிருப்பது வலைதளத்தில் எலான் மஸ்க்கின் அடுத்த அறிவிப்பின் மீதான ஆர்வத்தைத் தூண்டியுள்ளது.

 

SR

About Author

You may also like

அறிந்திருக்க வேண்டியவை

பூமியின் உள் மையத்தின் ரகசியம் அம்பலம்!

பூமியின் உட்புறத்தில் என்ன இருக்கிறது என்ற கேள்விகளுக்கான விடயங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. விஞ்ஞான வளர்ச்சி ஏற்படும்போது மேலும் ஆழமாகவும், விரிவாகவும் கேட்கபடுகிறது. கேள்விகள் கேட்பதும் அதற்கான பதிலை தேடுவதும்
அறிந்திருக்க வேண்டியவை

ChatGPTக்குப் போட்டியாக Google எடுத்த அதிரடி நடவடிக்கை

Google நிறுவனம் ChatGPTக்குப் போட்டியாக புதிய செயலியை அறிமுகம் செய்யவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அதற்கமைய, செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பம் வாயிலாகச் செயல்படும் கலந்துரையாடல் செயலியை Google அறிமுகம் செய்யவுள்ளது.
error: Content is protected !!