ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டினின் மறைவுக்கு வாழ்த்துகிறோம் – ஜெலென்ஸ்கி!
உக்ரைனின் அமைதிக்காக பிராத்தனை செய்யும் அதேவேளை ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டினின் மறைவுக்காக வாழ்த்து தெரிவிப்பதாக உக்ரைன் ஜனாதிபதி ஜெலென்ஸ்கி தெரிவித்துள்ளார்.
கிறிஸ்துமஸ் வாழ்த்துச் செய்தியில் அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
இதன்போது மேலும் தெரிவித்த அவர், ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் “அழிந்து போக வேண்டும்” என்பதே உக்ரைனிய மக்களின் பிரார்த்தனையாக உள்ளது எனவும் ரஷ்யாவின் ஆக்கிரமிப்பு மற்றும் ஏவுகணைத் தாக்குதல்களால் உக்ரைன் மக்கள் அனுபவிக்கும் துயரங்களையும் சுட்டிக்காட்டியுள்ளார்.
“சுதந்திரத்திற்குப் பெரிய விலை கொடுக்க வேண்டியிருக்கிறது, ஆனால் அடிமைத்தனத்தின் விலை அதைவிட அதிகம்” எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் நீதி கிடைக்கும்வரை போர் தொடரும் என எடுத்துக் கூறிய ஜெலென்ஸ்கி உலக நாடுகள் உக்ரைனுக்கு வழங்கும் ஆதரவைத் தொடர வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.





