போதையில் ஏற்பட்ட குழப்பம்!! மகனை அடித்தே கொன்ற தந்தை
திருச்சூர் – குடிபோதையில் ஏற்பட்ட தகராறில் மகனை அடித்துக் கொன்ற தந்தை கைது செய்யப்பட்டுள்ளார்.
ஆலப்புழா வள்ளிவட்டத்தில் உள்ள வீட்டில் பைஜூ (39) என்பவர் படுகொலை செய்யப்பட்டார்.
இச்சம்பவத்தில் பைஜூவின் தந்தை பாபு (59) என்பவரை இரிங்காலக்குடா பொலிசார் கைது செய்தனர். அவரை சம்பவ இடத்திற்கு அழைத்து வந்து ஆதாரங்கள் சேகரிக்கப்பட்டன.
இச்சம்பவம் இம்மாதம் 10ஆம் திகதி இடம்பெற்றுள்ளது. குடிபோதையில் வந்த பைஜுவும் பாபுவும் வீட்டில் தகராறு செய்ததாகவும், தந்தை தனது மகனின் தலையில் அடித்ததாகவும் பொலிசார் தெரிவித்தனர்.
படுகாயமடைந்த பைஜூ கொடுங்கல்லூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாலும், காயம் பலமாக இருந்ததால் திருச்சூர் மருத்துவக் கல்லூரிக்கு மாற்றப்பட்டார்.
எனினும், சிகிச்சை பலனின்றி பைஜு உயிரிழந்தார்.
(Visited 11 times, 1 visits today)





