இந்தியா – கனடா இடையே மோதல் வெடித்தது!!! வர்த்தக ஒப்பந்தமும் ரத்து
கனேடிய மூத்த இராஜதந்திரி ஒருவரை உடனடியாக நாட்டிலிருந்து வெளியேற்ற இந்தியா நடவடிக்கை எடுத்துள்ளது.
அதன்படி, இராஜதந்திர அதிகாரியை 05 நாட்களுக்குள் இந்தியாவை விட்டு வெளியேறுமாறு உத்தரவிடப்பட்டுள்ளதாக இந்திய வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.
ஒருங்கிணைக்கும் வகையில் கனேடிய தூதரக அதிகாரியை இந்தியா வெளியேற்றியுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
கனடாவில் உள்ள இந்திய தூதரக அதிகாரி ஒருவரையும் கனடா வெளியேற்றியுள்ளது.
அதன்படி தற்போது இந்தியாவும் கனடாவும் சர்வதேச சமூகத்தின் முன்னிலையில் பகிரங்கமாக மோதிக்கொண்டிருப்பதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
கனடாவில் துப்பாக்கிச்சூடு தாக்குதலில் உயிரிழந்த சீக்கியர் உயிரிழப்பில் இந்தியாவுக்கு தொடர்பு இருப்பதாக கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ அந்நாட்டு நாடாளுமன்றத்தில் தெரிவித்த கருத்து இந்தியா-கனடா இடையே ஏற்பட்டுள்ள இராஜதந்திர நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.
இதற்கு இந்தியா கடும் கண்டனம் தெரிவித்ததுடன், குற்றச்சாட்டுகளை வன்மையாக நிராகரிப்பதாகவும் தெரிவித்துள்ளது.
இதற்கிடையில், தீவிரமடைந்து வரும் இராஜதந்திர நெருக்கடி காரணமாக, கனடா மற்றும் இந்தியாவுடனான வர்த்தக உறவுகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் இரு நாடுகளுக்கும் இடையில் செய்யவிருந்த வர்த்தக ஒப்பந்தத்தையும் கனடா இரத்து செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.