தண்ணீர் அடி பம்பு சேர்த்து கான்கிரீட் போடப்பட்டது
த. சிவப்பிரகாசம்
கள்ளக்குறிச்சி அருகே சிமெண்ட் சாலையுடன் தண்ணீர் அடி பம்பும் சேர்த்து கான்கிரீட் போடப்பட்டதால் பொதுமக்கள் தண்ணீர் பிடிக்க முடியாமல் அவதி.. !! இதுபோன்று தவறு செய்யும் ஒப்பந்ததாரர் மற்றும் அதிகாரிகள் மீது நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.. !!
பொதுமக்களுக்கு குடிநீர் தடையின்றி வழங்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
வேலூர் மாவட்டத்தில் வீட்டில் வெளியில் நிறுத்தியிருந்த இருசக்கரவாகனத்தோடு சேர்த்து சாலை அமைத்தது குடி நீர் அடிபம்புடன் சேர்த்து சிமெண்ட் சாலை கால்வாய் அமைக்கப்பட்டது தொடர்ந்து பெரும் சர்ச்சையை கடந்த ஆண்டு ஏற்படுத்திய நிலையில்.
இந்த ஆண்டு கள்ளக்குறிச்சி மாவட்டம் கள்ளக்குறிச்சி ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட மாதவச்சேரி கிராமத்தில் மாரியம்மன் கோவில் தெருவில் புதிதாக 5 லட்சத்து 37 ஆயிரம் மதிப்பீட்டில் சிமெண்ட் சாலை அமைக்கப்பட்டது.
ஆனால் குடிநீர் அடிபம்பு பயன்பாட்டில் இருந்ததை புதைத்து சிமெண்ட் சாலை அமைக்கப்பட்டுள்ளதை கண்டு பொதுமக்கள் கொந்தளித்து உள்ளனர்.
இது குறித்து ஊராட்சி நிர்வாகத்திடம் பல முறை கூறியும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கை பம்போடு போட பட்ட சிமெண்ட் சாலையை வீடியோ எடுத்து அந்த ஊர் மக்கள் அதனை சமூக வலைதளங்களில் பரவி வருகின்றனர்.
ஊராட்சி நிர்வாகம் மற்றும் ஒப்பந்ததாரர் மீது மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுக்க வேண்டும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இந்த கைப்பந்து உடன சிமென்ட் சாலை அமைக்கப்பட்டதால் அங்கு பொதுமக்கள் கை பம்ப்பில் இயக்கி குடிநீர்.
எடுக்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளதால் பொதுமக்கள் பாதிப்பு பாதித்து வருகின்றன. உடனடியாக சிமெண்ட் சாலை அப்புறப்படுத்தி பொதுமக்கள் கைப்பந்து இயக்கி குடிநீர் எடுக்கும் வகையில் சரி செய்ய வேண்டும் இதுபோன்று தெரிந்து தவறு செய்பவர்கள் மீது கடும் நடவடிக்கை தீவிர படுத்த வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.