அரசியல் இலங்கை செய்தி

பேரிடரால் முழுமையாக சேதமடைந்த வீடுகளுக்கு 9 ஆம் திகதி முதல் இழப்பீடு!

“அனர்த்தத்தால் முழுமையாக சேதமடைந்த வீடுகளுக்காக இழப்பீடு வழங்கும் மற்றும் புதிய வீடுகளை நிர்மாணிக்கும் திட்டம் ஜனவரி 9 ஆம் திகதி அநுராதபுரம் மற்றும் குருநாகலில் ஆரம்பிக்கப்படும்.”

இவ்வாறு ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்தார்.

நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழுவின் இரண்டாவது கூட்டம் இன்று (07) பிற்பகல் நாடாளுமன்ற வளாகத்தில் நடைபெற்றது.

இதன்போதே ஜனாதிபதி மேற்கண்டவாறு கூறினார்.

டித்வா சூறாவளியால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்கும் அரசின் செயற்திட்டத்தின் தற்போதைய நிலைமை மற்றும் மீள்குடியேற்றம் தொடர்பில் இதன்போது விரிவாக ஆராயப்பட்டது.

அத்துடன், பயிற்செய்கைகளுக்கு ஏற்பட்ட சேதத்திற்கு இழப்பீடு வழங்கும் செயற்பாடு குறித்து கலந்துரையாடப்பட்டது.

துல்லியமான தரவுகள் மற்றும் உண்மையான புள்ளிவிவரங்களின் அடிப்படையில் இதற்கான இழப்பீட்டுத் தொகையை வழங்கும் நடவடிக்கையை விரைவுபடுத்துமாறு ஜனாதிபதி அறிவுறுத்தினார்.

விவசாயத் திணைக்களம் மற்றும் கமநல சேவைகள் திணைக்களம் என்பவற்றுக்கே இந்த அறிவுறுத்தல் விடுக்கப்பட்டது.

அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட சிறு மற்றும் நடுத்தர அளவிலான வர்த்தகர்களுக்காக செயல்படுத்தப்படும் கடன் திட்டம் குறித்தும் இங்கு ஆராயப்பட்டது.

வங்கிகளுடன் கலந்தாலோசித்து அந்தக் கடனைப் பெறுவது குறித்து வர்த்தக சமூகத்திற்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் திட்டத்தின் அவசியம் குறித்தும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.

Dila

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
error: Content is protected !!