ஏதென்சுக்கு அருகே தீயினால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு இழப்பீடு அறிவிப்பு

ஏதென்ஸுக்கு அருகே 10,000 ஹெக்டேர்களை எரித்த தீயினால் பாதிக்கப்பட்ட நூற்றுக்கணக்கான குடும்பங்கள் மற்றும் வணிகங்களுக்கு மொத்தம் மில்லியன் கணக்கான யூரோக்கள் அவசர இழப்பீடு வழங்குவதாகக் கிரீஸ் அறிவித்துள்ளது.
தலைநகரில் இருந்து 35 கி.மீ (22 மைல்) தொலைவில் உள்ள வர்ணவாஸ் நகருக்கு அருகில் ஆகஸ்ட் 11 ஆம் தேதி தீ பரவத் தொடங்கியது,
இதுவரை மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளில் 146 வீடுகள் கடுமையாக சேதமடைந்துள்ளதுடன், 31 வர்த்தக நிலையங்களும் பாதிக்கப்பட்டுள்ளன.
அதிகாரிகள் வீடுகளுக்கு 150,000 யூரோக்கள் ($166,650), அரசாங்க உதவியில் 80% மற்றும் வட்டியில்லாக் கடன்களில் 20 சதவீதம் மற்றும் அழிக்கப்பட்ட வணிகங்களுக்கு 500,000 யூரோக்கள் வரை வழங்குவார்கள் என்று நிதி அமைச்சகம் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.
(Visited 12 times, 1 visits today)