பொருளாதார சீரழிவு குறித்து ஆராயும் குழுக் கூட்டம் இன்று!

நாட்டின் பொருளாதாரம் திவால்நிலையை அடைந்தமைக்கான காரணத்தை கண்டறிய நியமிக்கப்பட்ட குழு இன்று (18.07) முதன் முறையாக கூடவுள்ளது.
இதன்படி நாடாளுமன்ற வளாகத்தில் இந்த கூட்டம் நடைபெற உள்ளதாக குழுவின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான சட்டத்தரணி சாகர காரியவசம் தெரிவித்தார்.
குழு உறுப்பினர்களுடன் கலந்தாலோசித்து அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து முடிவு எடுக்கப்படும் என்றும் நாட்டின் பொருளாதாரம் தொடர்பில் தீர்மானங்களை எடுத்த தரப்பினர் அழைக்கப்படவுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
இதேவேளை இந்த குழுவிற்கு பல எதிர்புகளும் கிளம்பியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
(Visited 10 times, 1 visits today)