காமன்வெல்த் வங்கி முறைகேடு: $68 மில்லியனை திருப்பிச் செலுத்த இணக்கம்
குறைந்த வருமானம் கொண்ட வாடிக்கையாளர்களிடம் இருந்து முறையற்ற விதத்தில் வசூலிக்கப்பட்ட 68 மில்லியன் டாலர் கட்டணத்தை திருப்பிச் செலுத்த ஆஸ்திரேலியாவின் காமன்வெல்த் வங்கி ஒப்புக்கொண்டுள்ளது.
கடந்த ஐந்து ஆண்டுகளாக, குறிப்பாக ‘சென்டர்லிங்க்’ (Centrelink) கொடுப்பனவுகளைப் பெறும் பயனாளிகளின் கணக்குகளிலிருந்து இந்தக் கட்டணங்கள் கழிக்கப்பட்டுள்ளதாக ஆஸ்திரேலிய பத்திரங்கள் மற்றும் பரிவர்த்தனை ஆணையமான ‘ஆசிக்’ (ASIC) தெரிவித்துள்ளது.
சுமார் 270 மில்லியன் டாலர் வரை அநியாயமாக வசூலிக்கப்பட்டதாகச் சுட்டிக்காட்டப்பட்ட போதிலும், தற்போது அதில் கால் பகுதியை மட்டுமே திருப்பித் தர வங்கி இணங்கியுள்ளது.
ஏற்கனவே வாழ்வாதாரச் செலவுகளால் திணறி வரும் மக்களிடம் இவ்வாறான கட்டணங்களை வசூலிப்பது முற்றிலும் நெறிமுறையற்ற செயல் என ‘ஆசிக்’ ஆணையர் ஆலன் கிர்க்லேண்ட் கடுமையாகச் சாடியுள்ளார்.
வங்கியின் இந்தத் தீர்மானம் போதுமானதல்ல என நிதி ஆலோசகர்கள் பலரும் தற்போது அதிருப்தி வெளியிட்டு வருகின்றனர்.





