அண்ட வெளியில் இருந்து சூரிய குடும்பத்துக்குள் ஊடுருவும் வால் நட்சத்திரம் கண்டுபிடிப்பு

அண்ட வெளியில் இருந்து சூரிய குடும்பத்துக்குள் ஊடுருவிய ஒரு அந்நிய விண்கல் விஞ்ஞானர்களால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
31/அட்லஸ் (31/ATLAS) என பெயரிடப்பட்டுள்ள இந்த விண்கல், 2026ஆம் ஆண்டு மார்ச் 16ஆம் திகதி, வியாழன் கிரகத்தை நெருங்கும் என கணிக்கப்படுகிறது.
இந்தக் கணிப்பை விண்வெளி ஆய்வாளர்கள் மற்றும் வானியல் விஞ்ஞானிகள் உறுதிப்படுத்தியுள்ளனர். இது, சூரிய குடும்பத்திற்கு வெளியே இருந்து வந்துள்ளது என நம்பப்படுகிறது.
பொதுவாக இவ்வாறான விண்கற்கள் சூரிய குடும்பத்தில் இருந்து தான் தோன்றுகின்றன. ஆனால், 31/அட்லஸ் எனப்படும் இவ்வின்வெளி பொருள், அதன் பாதை மற்றும் வேகத்தைக் கொண்டு பார்க்கையில், இது இன்டர்ஸ்டெல்லர் (அண்ட வெளி) பின்புலத்திலிருந்து வந்ததாகத் தெரியவந்துள்ளது.
விண்வெளி ஆராய்ச்சிக்குப் புதிய வாசல்களைத் திறக்கும் இவ்விண்கல், விண்வெளியின் உருவாக்கம், பிற கிரக மண்டலங்களின் இயல்பு போன்ற விஷயங்களை ஆய்வு செய்யும் ஒரு அரிய வாய்ப்பாக விஞ்ஞானர்களால் கருதப்படுகிறது.
31/அட்லஸ் விண்கல் தொடர்பான கணிப்புகள், அதன் இயக்கம் மற்றும் வேகம் உள்ளிட்ட தகவல்களை தொடர்ந்து விஞ்ஞானிகள் கவனித்து வருகிறார்கள். இது, 2017 இல் கண்டுபிடிக்கப்பட்ட ஓமுவாமுவா மற்றும் 2019 இல் காணப்பட்ட போரிசோவ் விண்கற்களை அடுத்து, சூரிய குடும்பத்தைத் தொட்ட மூன்றாவது முக்கியமான இன்டர்ஸ்டெல்லர் பொருளாகக் கருதப்படுகிறது.
வானியல் ஆர்வலர்கள் மற்றும் ஆய்வாளர்கள், இந்த நிகழ்வை மிகவும் கவனத்துடன் பின்தொடர்கின்றனர். 2026 மார்ச் மாதம், இந்த விண்கல் வியாழனுக்கு நெருக்கமாக வரும் போது, அதனை மேலும் தெளிவாகப் பார்வையிடும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட உள்ளன.