செய்தி தமிழ்நாடு

காமெடி நடிகர் போண்டாமணி காலமானார்

பிரபல காமெடி நடிகர் போண்டாமணி தனது 60ஆவது வயதில் காலமானார்.

தனது இரண்டு சிறுநீரகங்களும் செயலிழந்து மருத்துவ சிகிச்சை பெற்று வந்த அவர் இன்று தனது வீட்டில் திடீரென மயங்கி விழுந்த நிலையில் உயிரிழந்துள்ளார்.

இலங்கையை பூர்வீகமாக கொண்ட நடிகர் போண்டா மணி, 1991ம் ஆண்டு வெளியான நடிகர் பாக்யராஜின் ‘பவுனு பவுனுதான்’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகினார்.

அதனை தொடர்ந்து ‘சுந்தரா டிராவல்ஸ்’, ‘மருதமலை’, ‘வின்னர்’, ‘வேலாயுதம்’, ‘ஜில்லா’ உள்ளிட்ட 250க்கும் அதிகமான திரைப்படங்களில் நடித்து புகழ்பெற்றார்.

சமீபத்தில் அவர் உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டார். இதையடுத்து சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனை தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார்.

இந்நிலையில் இன்று (23.12.2023) இரவு 10 மணிக்கு அவர் தனது வீட்டில் திடீரென்று மயங்கி உள்ளார்.

இதையடுத்து அவரை குடும்பத்தினர் மீட்டு குரோம்பேட்டையில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவரை பரிசோதித்த வைத்தியர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

போண்டா மணியின் மறைவுக்கு திரையுலகினர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

 

Jeevan

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!