போர்ப்பதற்றம் : தென்கொரியாவில் மீண்டும் கூட்டுப்போர் பயிற்சி
கொரிய தீபகற்ப பகுதியில் வடகொரியா தொடர் ஏவுகணை மற்றும் அணு ஆயுத சோதனைகளை நடத்துகின்றது. இதனால் தென்கொரியா, ஜப்பான் ஆகிய நாடுகளில் போர்ப்பதற்றம் ஏற்படுகிறது.
எனவே பாதுகாப்பு ஒத்துழைப்பை விரிவுபடுத்தும் நோக்கில் இந்த இரு நாடுகளும் அமெரிக்காவுடன் இணைந்து அவ்வப்போது கூட்டுப்போர் பயிற்சியில் ஈடுபடுகின்றன. ஆனால் வடகொரியா இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவிக்கிறது.
இந்தநிலையில் தென்கொரியா, ஜப்பான் மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகள் மீண்டும் முத்தரப்பு கூட்டுப்போர் பயிற்சியை தொடங்கின. தென்கொரிய தீபகற்ப பகுதியில் நேற்று தொடங்கிய இந்த பயிற்சியில் அமெரிக்காவின் அணுசக்தி திறன் கொண்ட பி-52 மூலோபாய வெடிகுண்டு சோதனை மற்றும் போர் விமானங்களும் ஈடுபடுத்தப்பட்டதாக தென்கொரிய பாதுகாப்பு அமைச்சகம் கூறியது.
(Visited 6 times, 1 visits today)