கொழும்பு அடுக்குமாடி குடியிருப்பில் இடிந்து விழுந்த லிஃப்ட்: பின்னர் நேர்ந்த சோகம்

கொழும்பில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் நேற்று லிஃப்ட் இடிந்து விழுந்ததில் காவல்துறை அதிகாரி ஒருவர் காயமடைந்துள்ளார்.
கிராண்ட்பாஸில் உள்ள முவடோர உயன அடுக்குமாடி குடியிருப்பின் ‘பிளாக் D’ இல் லிஃப்ட் சரிந்து விழுந்தது.
இந்த சம்பவம் திங்கட்கிழமை (நவம்பர் 11) அதிகாலை 1.30 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
சம்பவத்தில் காயமடைந்த பொலிஸ் கான்ஸ்டபிள் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
(Visited 31 times, 1 visits today)