வட சீனாவில் இடிந்து விழுந்த நிலக்கரி சுரங்கம் – ஐவரின் உடல்கள் மீட்பு !

வட சீனாவின் ஷாங்க்சி மாகாணத்தில் நிலக்கரிச்சுரங்கம் ஒன்று இயங்கி வருகிறது. இந்த நிலக்கரி சுரங்க கிடங்கு நேற்று இரவு 10.45 மணியளவில் திடீரென இடிந்து விழுந்தது. இந்த சம்பவத்தில் கிடங்கில் 7 பேர் சிக்கியதாக தகவல் வெளியானது.
மேலும் இந்த விபத்து குறித்து பொலிசார் மற்றும் மீட்பு படையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த பொலிஸார் மற்றும் மீட்பு படையினர் இடிப்பாட்டில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர்.
இந்நிலையில், சுரங்கத்தில் இருந்து 5 பேரின் உடல்கள் இன்று காலை 7 மணிக்கு மீட்கப்பட்டதாக தெரியவந்துள்ளது. இதனை தொடர்ந்து இடிப்பாட்டில் சிக்கிய மேலும் 2 பேரை தேடும் பணியில் மீட்பு படையினர் ஈடுபட்டுள்ளனர்.
(Visited 12 times, 1 visits today)